R.Maheshwary / 2022 ஜனவரி 12 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர்.
இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் பிக்குவிடமிருந்து கஞ்சா பெக்கட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிக்கு உள்ளிட்டவர்கள் பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காருக்குள்ளிருந்தும் மற்றுமொரு கஞ்சா பெக்கட், மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பிக்குவும் சாரதியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
28 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
36 minute ago