Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த காலங்களில், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த காலங்களில் பல வேலைகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், தாம் சேவைகளை முன்னெடுத்துச் சென்றபோது, அதற்கு பல தடைகள் ஏற்பட்டன என்றும் வளம், வரட்சி, குப்பை மேடு சரிவு, 52 நாள் ஆட்சி மாற்றம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இவ்வாறு பல தடைகள் ஏற்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.
இரத்தினபுரியில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
“நாம் அனைவரும் சேர்ந்து தெரிவு செய்த எமது ஜனாதிபதி, வேறொருக் கட்சியை கட்டிக்கொண்டமை தான் எமக்கு ஏற்பட்ட பெரியத் தடையாகும். அந்தக் கட்சியை கட்டிக்கொண்டு அதற்கு மீண்டும் உயிர் வழங்க முயற்சித்த போது தான் எமக்கு தடைகள் ஆரம்பமாகின.
“பல தடவைகள் எமது கால்களைப் பிடித்து இழுத்தப் போதிலும் நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சி மீது குறை கூறுகினர். பௌத்த மதத்தை அவமதிக்கின்றனர். அரங்தலாவையில் பிக்குகளைக் கொன்ற பிள்ளையானும் தலதா மாளிகையில் குண்டு வைத்த கருணா அம்மானும் இன்று யாருடன் இருக்கின்றனர்” என அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கு கட்சியின் உப தவிசாளர் பதவியை வழங்கியவர் யார்? தனி நாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜா பெருமாள் இன்று யாருடன் இருக்கின்றார்? எனவே இந்தத் தகவல்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றார்.
57 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago