Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தண்டவாளத்தில் பயணித்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் யுவதி ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும் யுவதி நுவரெலியா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள சிங்கமலை சுரங்கத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை, ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதானவர் என்றும் 17 வயதான யுவதி டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் ரயில் பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.இதனால் இருவரும் கடும் காயமடைந்தனர். ரயில் கட்டுபாட்டாளரால் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விருவரும் வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சித் ராஜபக்ஸ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago