Janu / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல 14 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தந்தை எச்சரித்ததால் , செவ்வாய்க்கிழமை (09) அன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி அதே பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன் திங்கட்கிழமை (08) அன்று ஆடைகளை தைப்பதற்கு நகரத்திற்கு சென்று, வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அவளுடைய தந்தை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி விஷம் அருந்தியுள்ளதுடன் பின்னர், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று உயிரிழந்துள்ளார்.
அவளுடைய மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புதன்கிழமை (10) அன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சுமனசிறி குணதிலக
14 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
48 minute ago