Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுமியின் தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று தலவாக்கலை பிரதேசத்தில் புதன்கிழமை (01) பதிவாகியுள்ளது.
வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் சிறுமியின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நுவரெலியா வைத்திய சாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
செ.தி .பெருமாள்
24 minute ago
53 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
53 minute ago
1 hours ago
3 hours ago