2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

தந்தை வெட்டிய கிளை விழுந்ததில் மகன் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையால் வெட்டப்பட்ட பலா மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்ததில் அவரது மகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இரத்தினபுரி , கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் புதன்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.

13 வயதான மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மகன் தனது தந்தை மற்றும் நபரொருவருடன் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தந்தையும் நபரும் இணைந்து பலா மரத்தை வெட்டிக்கொண்டிருந்த போது மரத்தின் கிளை ஒன்று மகனின் தலையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X