2025 மே 02, வெள்ளிக்கிழமை

தந்தையின் கார்டை இழுத்த மகன் கைது

Editorial   / 2024 ஒக்டோபர் 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தந்தையின் பண பரிமாற்ற வங்கி அட்டையை பயன் படுத்தி 37,160 ரூபாயை மோசடி செய்த 35 வயது உடைய மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

  நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்ட்டன் பிரிவைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தந்தை முனியாண்டி முருகன், செய்த முறைப்பாட்டை அடுத்து  அவரது மகன் கைது செய்யப்பட்டார்.  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்பின் பேரில், சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .