Kogilavani / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் தோட்டத் தொழிற்சங்கங்கள் கூட்டாகவும் தனித்தும் எதிர்வரும் 1ஆம் திகதி மே தினத்தை நடத்தவுள்ளன.
இ.தொ.கா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமது மே தினத்தை நுவரெலியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெறும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
அமைச்சர் பழனி திகாம்பரத்தை தலைமையாகக் கொண்ட தொழிலாளர் தேசிய சங்கம், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து தலவாக்கலை நகரில், மே தின கூட்டத்தை நடத்தவுள்ளன.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தமது தலைமைப்பீடமான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, கொழும்பு கெம்பல் மைதானத்தில், தமது மேதின கூட்டத்தை நடத்தவுள்ளது.
விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்
பதுளையை தலைமையாகக் கொண்ட விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், தமது மே தின கூட்டத்தை, பசறை ரொபேரி பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி நடத்தவுள்ளது.
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
பதுளையை தலைமையகமாகக்கொண்ட ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மே தின கூட்டம் தொடர்பாக இன்னும் இரு தினங்களில் முடிவை அறிவிக்குமென, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமது மே தின கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது தொடர்பில் நாளை (26) பொதுச் சபை கூட்டத்தில் முடிவெடுக்குமென முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago