R.Maheshwary / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன்
எனக்கு கிடைத்துள்ள இந்த இராஜாங்க அமைச்சானது தனக்கு கிடைத்த அமைச்சல்ல எமது முழு சமூகத்துக்குமான அமைச்சாகும். எனவே, இந்த அமைச்சின் ஊடாக மலையகத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த தான் முழு துடிப்போடும் முழு மூச்சாக செயற்படுவேன் என, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சரை வரவேற்கும் நிகழ்வு, பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
மலையகம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு ,சப்ரகமுவ மாகாணங்களில் காணப்படும் வசதிக்குறைந்த பாடசாலைகளின் வளச்சிக்கும் தன்னுடைய அமைச்சின் ஊடாக பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்வி இராஜங்க அமைச்சின் நியமனத்தை வழங்கும் போது, தம்மிடம் மலையக பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கும் ஏனைய பிரதேச தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் தாங்கள் மிகுந்த உத்வேகத்துடன் பணியினை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு மலையகப்பகுதியில் காணப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏனைய அமைச்சுகளோடு கலந்துரையாடி தம்மால் முடிந்த தீர்வுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .