2025 மே 02, வெள்ளிக்கிழமை

தனமல்வில சம்பவம் : சிறுமிக்கு அச்சுறுத்தல் அழைப்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுமிக்கு, தான் பொலிஸ் அத்தியட்சகர் என கூறி வாக்குமூலம் பெற முயன்ற தொலைப்பேசி அழைப்போன்று கிடைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி ரிஜ்வே ஆர்யா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .