2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனி நபர் போராட்டம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 24 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ் சதீஸ், எம்.கிருஸ்ணா

வேலை நாள்களை அதிகரிக்கக் கோரி,  கொட்டும் மழையில் தொழிலாளி ஒருவர், தனிநபராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

பொகவந்தலாவ -கெம்பியன் 57 ஆம் பிரிவை சேர்ந்த, நாகூர் பிச்சை என்ற தொழிலாளியே கெம்பியன் நகர் விநாயகர் ஆலயத்தின்  முன்பாக  போராட்டத்தில் ஈடுபட்டார்.

நேற்று (24) பகல்  12 மணிமுதல் 01 மணிவரை கொட்டும் மழையில் பதாதை ஏந்தி ஆர்பாட்டத்தை முன்னெடுத்த அவர், தோட்ட தொழிலாளிகளின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய் என அறிவித்த பின்னர் தோட்ட நிர்வாகம் மாதத்தில்  12 அல்லது 14 நாள்களே வேலை வழங்குகிறன.

12 நாள்கள் வேலை செய்து எமது வாழ்க்கை செலவை கொண்டு நடத்தை முடியாது. 25 நாள்கள் வேலை செய்தாலே எங்கள் குடும்பத்தை கொண்டு நடாத்த முடியும்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது வார்த்தையளவிலே உள்ளது. தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடி அதிகரித்துள்ளது.  நாட்டின் ஜனாதிபதி தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என.தொழிலாளர் சார்பாக கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .