2026 ஜனவரி 21, புதன்கிழமை

தனிமைப்படுத்தலை மீறி ஜோதிடம் பார்க்கச் சென்ற பெண்ணுக்குச் சிக்கல்

Kogilavani   / 2021 மே 20 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை நகருக்கு அண்மித்தப் பிரதேசமொன்றில், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளை மீறி, ஜோதிடம் பார்க்கச் சென்ற பெண்ணொருவரை, பொதுசுகாதார பரிசோதகர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன், தொடர்ந்து 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்படிப் பெண்ணின் வீட்டில், ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், குறித்த பெண்ணின் மகள் பருவமடைந்துள்ளார்.

தனது மகள் பருவமடைந்த நேரத்தைக் கணிப்பதற்காக அந்தப் பெண் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஜோதிடரைச் சந்திக்கச் சென்றுள்ளார். நேரத்தைக் கணித்துவிட்டுத் திரும்பும்போது, பொது சுகாதார பரிசோதகர்களிடம் அவர் எதிர்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணை கடுமையாக எச்சரித்த பொதுசுகாதார பரிசோதகர்கள், தொடர்ந்து 14 தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் அந்தப் பெண் சந்தித்த ஜோதிடர் மற்றும் அவரது வீட்டாரையும், பொது சுகாதாரப் பரிசோதகர் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X