Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்..கணேசன்
அரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று நேற்று (11) நடைபெற்றது.
போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை விற்பதை உடனே நிறுத்து, அரசாங்கமே இந்த பண்ணையை தொடர்ந்து நடத்த வேண்டும், இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் பண்ணையை தனியாருக்கு விற்காதே என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்பட்டது.
எந்தவிதமான முன்அறிவித்தலும் இல்லாமல் இரகசியமான முறையில் குறித்த தேசிய பண்ணையை தனியார் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பள அடிப்டையில் நாங்கள் தொழில் செய்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு சம்பள அதிகரிப்பு தேவையில்லை. மாறாக இந்த பண்ணையை தனியார்துறைக்கு வழங்க அனுமதிக்க வேண்டாம்.
இந்த கால்நடை பண்ணை அதிக இலாபத்துடனையே இயங்கு வருகின்றது. குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இவ்வாறான நடவடிக்கைளை அதிகாரைிகள் மேற்கொள்ள வேண்டாம் எனவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீட்டு, தொடர்ந்தும் அரசாங்கமே இந்த பண்ணையை நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
36 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
4 hours ago