2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தப்பிய சாரதி கைது

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா    

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை, பொரலந்தையில் வைத்து, ஹப்புத்தளை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

ஹப்புத்தளையில் இடம்பெற்ற கார் விபத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

லொறியொன்றை செலுத்தி வந்த நபரொருவர், மேற்படி தம்பதிகள் பயணித்த காரை மோதிவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தப் பொலிஸார், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பொரலந்தையில் வைத்து குறித்த நபரை, லொறியுடன் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X