2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தப்பியோடிய சிறைக் கைதி இரண்டு வருடங்களுக்குப் பின் கைது

Kogilavani   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தப்பியோடியதாக கூறப்படும் கைதி ஒருவரை ஹல்துமுல்லை, மல்தென்ன பகுதியில் வைத்து அப்புத்தளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(3) கைதுசெய்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றச் செயலொன்றுக்காக  இரத்தினபுரி மேல் நிதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட மேற்படி நபர், குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன் அவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனடிப்படையில் குருவிட்ட சிறைச்சாலையில், இந்நபர் தண்டனையை அனுபவித்து வந்தார். இதன்போது நோய்வாய்ப்பட்ட அவரை, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்  கைதி தப்பியோடியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டு வந்த மேற்படி நபர், தனது பெயரை மாற்றிகொண்டு மல்தென்ன பகுதியில் வாழ்ந்து வருவதாக கிடைக்கப்பெற்ற   தகவலை தொடர்ந்து, பொலிஸார் மல்தன்னவுக்கு விரைந்ததுடன் அந்நபரை கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .