Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக தயாபண்டார
தபால் மூல வாக்களிப்புக்கு முன்னபதாக, சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைக்க வேண்டும் என்று, அரச தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
அரச பணியாளர்களை பாதிக்கும் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்பட வேண்டுமென, அரச தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஜித். கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களை அரசியல் மயமாக்கலிருந்து விடுவிப்பதற்காக, நியமனங்களின் போது, வெளிப்படையான போட்டிப் பரீட்சைகளை நடத்துவதுடன் கூட்டுதாபனங்களின் பிரதானிகள், பணிப்பாளர்களை நியமிக்கும் போது, நேரடி அரசியல் தலையீடுகள் இன்றி, தகுதியானவர்களை நியமிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிறுவனங்களாக இருக்க வேண்டுமென்றும் பணியாளர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர்களிடம் அனுப்பியுள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.
அரச சேவைகள், தொழிற்சங்கங்களைப் பலப்படுத்தல், அரசியல் நிகழ்வுகளுக்காக முன்னெடுக்கப்படும் தேவையற்ற செலவுகளைக் குறைத்தல், மூடப்பட்டுள்ள தேயிலை, தென்னை, இறப்பர் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்து, அத்துறைகளை அபிவிருத்தி செய்தல் என்பது தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாகவும் அரச தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஜித். கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago