Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ்கீர்த்தி ரத்ன
அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களால், நீண்ட நாற்பட்ட நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை, குறித்த நோயாளர்களுக்கு, தபால்மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை, மாத்தளை மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளதாக, மாத்தளை பிரதேச தபால் ஊழியர் அனுர ரத்நாயக்க தெரிவித்தார்.
நோயாளிகள், அரச வைத்தியசாலையின் சிகிச்சை (கிளினிக்) பிரிவுக்கு வழங்கியுள்ள முகவரிக்கு, தபால்மூலம் மருந்துகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை பிரதான தபால் நிலையம், உப தபால் நிலையங்களுக்கூடாக, மருந்துகளை விநியோகிக்கும் செயற்பாடுகள், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரச ஒசுசலங்களில் மருந்துகளை விலைக்கு வாங்குபவர்களுக்கென, அரச ஒசுசலங்களின் வட்சப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் வட்ஸப் இலக்கங்களுக்கு அனுப்பப்படும் மருந்துச்சீட்டுகளுக்கு அமைவாக, அவற்றையும் வீடுகளுக்குக் கொண்டு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படித் தபால் ஊழியர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago