R.Maheshwary / 2022 ஜூன் 22 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து, அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும், வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி இன்று தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொழிலாளர்களுக்கு அறிவித்த நிலையில்,
அதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது, 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது.
அத்தோடு நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை. என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர் .


6 minute ago
8 minute ago
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
35 minute ago
40 minute ago