2026 மே 09, சனிக்கிழமை

’தமிழர்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதே நோக்கம்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.ஏ.எம்.ஹசனார்

பதுளை மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து, தன்மானமிக்க தமிழ்ப் பரம்பரையினரை உருவாக்குவதற்காகவே, தமிழர் புரட்சிப் பேரவை அமைக்கப்பட்டது என, பேரவையின் தலைவர் பத்மநாதன் தெரிவித்தார்.

ஹாலி-எலயில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ​மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முதலாளித்துவத்துக்குக் கீழ் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை,  அடிமை சாசனத்தில் இருந்துமீட்டு எடுப்பதே, தங்களது பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் புரட்சிப் பேரவையின் மூலம், பதுளை, பசறை, ஹால-எல போன்ற பிரதேச சபைகளில், மூன்று உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதாகவும் எனவே, தங்களது தோட்ட மக்களின் இன்னோரன்னத் தேவைகளை அறிந்து, அனைத்துத் தேர்தலிலும் பேரவை களமிறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .