Editorial / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றம்,செவ்வாய்க்கிழமை (20) காலை 9.30 மணிக்கு, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
பாராளுமன்றத்தின் பிரதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது எழுந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியாவில், 21ஆம் திகதி (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு நடத்தப்படவுள்ளது.
இதற்கு தமிழ்மொழி ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை. இதற்கு முன்னரும் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட செயலமர்வுகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை. ஏன்? பாகுபாடு காட்டுகின்றீர்கள் என வினவினார்.
இதற்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த செயலமர்வுகள் யுஎன்டீபியின் நிதி அனுசரணையில் நடத்தப்படுகின்றது. அவ்வாறு பாகுபாடு ஏதுவும் காட்டப்படவில்லை. ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
குறுக்கிட்ட இராதாகிருஷ்ணன், நுவரெலியா தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சிங்களம் நன்றாக தெரியும். ஆனால், ஏன்? தமிழ் ஊடகவியலாளர்களை இவ்வாறான செயலமர்வுகளுக்கு அழைப்பதில்லை எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல, இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago