2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தமிழ்மொழித் தினப் போட்டியில் சாதனை

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெய்யன் 

அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித் தினப் போட்டியில் மத்திய மாகாண வத்தேகம கல்வி வலயம் 5 இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட மடுல்கலை க/வத்/பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி A. யேக்ஷிகா, பிரிவு 3 பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

அதே நேரம் மமா/க/வத்/இரஜவலை இந்து தேசிய கல்லூரி மாணவி G.அனிஷ்காபிரிவு 4 தனி இசைப் போட்டியில்  முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். 

அதே நேரம் மமா/க/வத்/இரஜவலை இந்து தேசிய கல்லூரியைச் ​சேர்ந்த T.டிலுக்ஷனா, பிரிவு 5 பேச்சுப் போட்டியில்  மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், பிரிவு 1 குழு நடனப்போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், பிரிவு 1 குழு இசைப் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .