2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

தம்புளையில் குவிந்த மரக்கறிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ

தம்புள்ளையில் ஊரடங்குச் சட்டம் இன்று (20) தளர்த்தப்பட்டதையடுத்து, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு, பாரிய அளவிலான மரக்கறிகளும் பழவகைகளும் குவிந்தன.

அத்துடன், மரக்கறிகளின் விலைகளில், பாரிய வீழ்ச்சி காணப்பட்டது.

பல மரக்கறிகளின் விலை கிலோகிராமொன்று 10 – 20 ரூபாய்க்குள் இருந்த அதேவேளை மற்றையவை, கிலோகிராமொன்று 30 – 40 ரூபாய்க்குள் காணப்பட்டது.

ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 60 -80 ரூபாயாகவும் லீக்ஸ் ஒரு கிலோகிராமின் விலை 70 – 80 ரூபாயாகவும் காணப்பட்டது.

தங்களது காய்கறிகள், நல்ல அறுவடையைத் தரும் என்றும் எனவே, எந்தவொரு பற்றாக்குறையும் இன்றி, நுகர்வோரின் தேவையை நிறைவுற்ற முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .