2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தரமற்ற தீப்பெட்டிகள் மீட்பு

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட, சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியான, 1,590,000 தீப்பெட்டிகளை, கண்டியின் இருவேறு தொழிற்சாலைகளிலிருந்து  கைப்பற்றியுள்ளதாக,  நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பொதிகளில், 1,440,000   சிறிய தீப்பெட்டிகள் இருந்ததாக, நுகர்வோர்   அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றின் சந்தைப்பெறுமதி 8,640,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை. கண்டி - பல்லேகலையிலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து, 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150,000 தீப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .