2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தற்காலிக வியாபார உரிமையாளர்களுடன் முரண்பாடு

Freelancer   / 2023 ஏப்ரல் 07 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. சந்ரு

நுவரெலியாவிற்கு தூரப் பகுதியில் இருந்து வருகைத் தரும் பேருந்துகளை நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகின்றது.

இருந்தும் தற்போது இவ்விடத்தில் தற்காலிகமாக வியாபாரம் செய்வதற்கு லொறி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபார லொறினை அகற்றுமாறு கோரி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நுவரெலியா தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் வியாபாரம் செய்பவர்களிடம் இவ்விடத்தில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமையினால் வியாபாரம் செய்வதற்காக நிறுத்தப்பட்ட லொறினை அகற்ற கோரிக்கை விடுத்தனர் . R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X