2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலதாவின் தந்தையா உயிரிழந்தது

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்​டி, தலதா மாளிகைக்கு உரித்துடைய யானைகளில் ஒன்றான, “தந்தையா” என்றழைக்கப்படும் கொம்பன் யானை, தனது 49 ஆவது வயதில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.

மேற்படி கொம்பன் யானை, 1978ஆம் ஆண்டு விமலா கன்னங்கரா என்ற சீமாட்டியால், தலதாமாளிகைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாக  அவர் கூறினார். 

குறித்த யானையானது, 1978 ஆண்டிலிருந்து இதுவரை, கண்டி தலதா மாளிகையின் பெரஹராக்களில்  பங்கெடுத்துள்ளதுடன்,  பகற் பெரஹராக்களில், இந்த யானையே புனித தந்தத்தை சுமந்து செல்வதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யானை உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .