Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை தோட்டம் மற்றும் இத்தோட்டத்தின் பிரிவான நானுஓயா தோட்டம் ஆகியவற்றில் தோட்டத் தொழிலை மேற்கொள்ள தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவருவதாக தோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை நிவர்த்திக்கும் முகமாக கடந்த சில வாரங்களுக்கு மேலாக குறித்த இரண்டு தோட்டங்களிலும் கொழுந்து பறிக்கவும் தேயிலை மலைகளில் புற்கள் வெட்டவும் தற்காலிகமாக தொழிலாளர்களை பிற தோட்ட பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தோட்டப்பகுதிகளில் வயதின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளதும் தோட்டதொழிலை விரும்பாமல் பெண்கள் மற்றும் ஆண்கள் விடுமுறை கடிதங்களை எழுதி தோட்ட நிர்வாகத்துக்கு கொடுத்துவிட்டு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் நகர் பகுதிகளுக்கு தொழில் தேடி சென்றுள்ளமையினால் இந்த தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பொழுது தேயிலை விளைச்சல் அதிகரித்து வரும் காலப்பகுதியில் என்பதால் கொழுந்து பறிக்கும் தொழிளாலர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
அதேபோன்று தேயிலை மலைகளில் கானப்படும் புற்களை ஒழிக்கவும் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காகவே தலவாக்கலை பிரதேச தோட்டபகுதிகளை உள்ளடக்கிய தோட்டங்கள் பலவற்றிலிருந்து தொழிலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பறிக்கும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 22 ருபாய் 50 சதம் கை காசாக வழங்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கின்றனர். இது தலவாக்கலை நானுஓயா தோட்டத்தில் மாத்திரம் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, தலவாக்கலை தோட்டத்தில் தேயிலை மலைகளை துப்பரவு செய்யும் தொழிலுக்கு தற்காலிக தொழிலாளர்கள் இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டத்திலிருந்து தலவாக்கலை தோட்ட நிர்வாகம் லொரியில் காலை 08 மணிக்கு அழைத்துவருவதுடன் மாலை 06 மணிக்கு மீண்டும் தொழிலை முடித்து வீடு செல்கின்றனர். இத்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிக கொடுப்பணவு வழங்கப்படுவதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago