2026 ஜனவரி 21, புதன்கிழமை

தலவாக்கலை நகரில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2021 மே 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ் 

தலவாக்கலை நகரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை பொது சுகாதார அதிகாரி ருவான் சுமனசேகர தெரிவித்தார்.

தலவாக்கலை நகரிலுள்ள மதுபானசாலையொன்றின் முகாமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி இருவருக்கும்  திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போதே. அவ்விருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மதுபானசாலையின் பணிபுரிந்த மற்றோர் ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் மதுபானசாலை மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X