2026 மே 09, சனிக்கிழமை

dd

தலவாக்கலை பகுதியில் விசேட டெங்கு பரிசோதனை

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட  பகுதிகளில், விசேடமான டெங்கு பரிசோதனை, நேற்று (31) மேற்கொள்ளப்பட்டது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், வட்டக்கொடை பகுதிகளில் விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நவதிஸ்பன டெங்கு ஒழிப்பு குழுவினர்கள், பூச்சியல் ஆய்வு பிரிவினர், தலவாக்கலை நகரசபை அதிகாரிகள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக, கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .