2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையிலும் ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், கேதீஸ், எஸ்.சதிஸ்

ஹட்டன்-தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் தலவாக்கலை நகரில், இன்று (29) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடகூடாது என்று, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையால், ஆர்ப்பாட்டக்காரர்கள், வீதியை மறிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை நகர மத்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையம்வரை சென்றது.

இதன்போது, அமைச்சர் திகாம்பத்தின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .