2026 மே 06, புதன்கிழமை

தலவாக்கலையில் இருவர் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகம் இனங்காணப்பட்ட கொழும்பு, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களிலிருந்து தலவாக்கலைப் பிரதேசத்துக்கு வருகைத்தந்து, எவ்விதத் தகவலும் வழங்காது, வீடொன்றில் மறைந்திருந்த இருவர், இன்று(2) சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.    

புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பில் தொழில் புரியும் மற்றுமொரு நபருமே, தலவாக்கலையிலுள்ள ஹேமச்சந்திர மாவத்தையில், இவ்வாறு மறைந்திருந்திருந்தனர் என்றும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, சுகாதார பரிசோதனை அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமையவே அவர்களை கண்டுபிடித்து, 14 நாள்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொழும்பில் தொழில்புரிந்த நபரின் வீடு,  ஹேமச்சந்திர  மாவத்தையிலேயே அமைந்துள்ளது. இதனால் தன்னுடன் பணிபுரிந்த புத்தளத்தைச் சேர்ந்த நபரையும் அழைத்துக்கொண்டே அவர் இப்பகுதிக்கு வந்துள்ளார்.

தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதியில், இதுவரையில் எழுவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் லக்மால் த சில்வா தெரிவித்தார்.

கொழும்பு, ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப் பகுதிகளுக்கு இக்காலப்பகுதியில் வருகைதரும் நபர்கள், உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்குமாறு கோருவதாகவும் அவர அறிவுறுத்தினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .