2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

தலவாக்கலையில் உணவகங்களுக்குப் பூட்டு

Editorial   / 2020 மே 13 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பி.கேதீஸ்

தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து உணவகங்களும் இன்று (13) முதல் மூடப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்த அவர்,

பொது சுகாதார பரிசோதகர்களால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவும், பொது மக்களை உணவகங்களுக்குள் அனுமதிக்காது உணவு பண்டங்களை மாத்திரம் பொதி செய்து விற்பனை செய்யுமாறு உணவக உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டதுத என்றும் ஆனால், அந்த உத்தரவை மீறி அனைத்து உணவகங்களும் செயற்பட்டதால் இவை மூடப்பட்டன என்றும் கூறினார்.

பொதுமக்களின் நலன்கருதியே தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன என்றும் உணவகங்களை முழுமையாக திறப்பதற்கு இதுவரை அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையில், பொது சுகாதார அதிகாரிகளால் பல்வேறு அறிவுரைகளை வழங்கி, திறப்பதற்கு அனுமதி வழங்கியபோதும், அதை உணவக உரிமையாளர்கள் பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .