2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையில் கடையொன்று எரிந்து சாம்பலாகியது

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து இன்று  காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X