R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து நேற்று (15) இரவு 10 மணியளவில் ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




7 minute ago
9 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
36 minute ago
41 minute ago