2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தலவாக்கலையில் மதுபானசாலைக்குப் பூட்டு

Gavitha   / 2021 மார்ச் 07 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தலவாக்கலை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மதுபான நிலையமொன்று, இன்று (07), கொட்டகலை சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டதுடன், அதில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு நேற்று (06)  வந்துசென்ற நபருக்கு,  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, இந்த மதுபான நிலையம் மூடப்பட்டுள்ளது.  

அத்துடன், குறித்த நபர் வந்து சென்ற பின்னர், அந்த மதுபான நிலையத்துக்கு வந்து சென்றவர்களின் விவரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, தொற்றுக்குள்ளான நபர், தலவாக்கலை நகரிலுள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கும் சென்றுள்ளார் என்றும் இதனால், அந்த உடற்பயிற்சி நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .