Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவான மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் துள்ள ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், அவர்களின் முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது, பதவிக்கும், பணத்துக்கும் விலைபோகாத எங்கள் பின்னாலேயே மக்கள் அணிதிரள்வார்கள் என்றார்.
பத்தனை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதுடன், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
"நாட்டிலே ஒரு புறம் விலை அதிகரிப்பு இடம்பெறுகின்றது, மறுபுறத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாடு படுகன்றனர். மூவேளை உண்டு வாழ்ந்த மக்கள் உணவு வேளையை சுருக்கியுள்ளனர். மேலும் சிலர் உண்ணும் அளவை குறைத்துள்ளனர். சிலருக்கு உணவு உண்ண வழியில்லை. பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலையும் உள்ளது. தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் நிலைமை மோசமாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் சுமைக்கேற்ற ஊதியம் இல்லை. தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் பழைய சம்பளம்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் போராடுவோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக குரல் கொடுப்போம். மற்றையவர்களைபோல ஏமாற்று அரசியல் நடத்த மாட்டோம்.
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது உயிர்மூச்சு. அதற்காக எல்லாவழிகளிலும் போராடுவோம். பணத்துக்கும், பதவிகளுக்கும் விலைபோக மாட்டோம். கொள்கை வழியில் பயணிப்போம். என்றார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago