2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தவறான செய்திகளை பரப்புவோரை எச்சரிக்கும் கதிர்செல்வன்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளார் விடயத்தில் அடியும் தெரியாமல் முடிவும் தெரியாமல், சிலர் முரண்பாடான செய்திகளை இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.எனவே அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அக்கரப்பத்தனை தவிசாளர் கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “தவிசாளராக பதவியேற்கும் போது இரண்டு வருட கால அவகாசத்தின் அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலுமே நியமிக்கப்பட்டேன்.தற்போது இரண்டரை வருடகாலம் பதவியில் இருந்து விட்டேன்.ஆகவே என் சுயவிருப்பிலேயே ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேனே தவிர எவரின் பலவந்தத்தாலோ அல்லது வேறு எந்த காரணங்களும் கிடையாது“.

ஆனால் ஒரு சிலர் இ.தொ.காவுக்கு தனக்கும் முறுகல் நிலை காணப்படுவதாகவும் இ.தொ.கா உயர்பீடத்தால் ஓரங்கட்டப்படுவதாகவும் குறிப்பிட்டு சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கதிர்ச்செல்வன் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X