Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
அரச வைத்தியசாலையில் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தவறான தடுப்பூசி வழங்கப்பட்டமையால், அந்நோயாளி தன்னுடைய கையை முற்றாக இழந்த சம்பவம், ருவன்வெல்லை, கோணாரம்ப பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோ செலுத்தி வாழ்வாதாரத்தை நடத்தி வந்த ஒருவரே, இவ்வாறு தனது ஒரு கையை இழந்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி, ஆஸ்மா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகளின் பின், அவருக்கு நான்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர், அவருடைய வலது கை, முற்றாக செயழிலந்துள்ளது என்றும் அவரது கை, கருமை நிறமடைந்தது என்றும் தெரியவருகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (15), அவர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் பரிசோதனைகளின் போது, இவருக்குத் தவறான தடுப்பூசி வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரியவருகின்றது.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago