Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Janu / 2024 ஜூன் 03 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை, கஹடபிட்டியவில் விற்பனைக் கடையொன்றின் பணியாற்றிய 21 வயதுடைய இளைஞன் பத்து நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை, கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஹசன் ராஷிக் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இவர் கடந்த ஆறு வருடங்களாக குறித்த கடையில் பணியாற்றி வந்ததாகவும் குறித்த இளைஞன் , கடையின் உரிமையாளருக்கு சொந்தமான களஞ்சியசாலையொன்றிலிருந்து எதையோ திருடிச் சென்றதால் கடை உரிமையாளரும், அவரது மகனும், இன்னும் சிலருடன் இணைந்து இளைஞனை தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாளிலிருந்து வீட்டுக்கு வராததால், இளைஞனின் தாயார் இது தொடர்பில் கடந்த 22ஆம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
3 hours ago
3 hours ago