Editorial / 2024 நவம்பர் 03 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெல்தெனிய, திகன பிரதேசத்தில் பொலிஸாரால் சனிக்கிழமை (02) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட போலி இலக்கத் தகடுகள் கொண்ட பிராடோ ரக ஜீப், தெல்தெனிய கல்தென்ன போதகருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திகன ஐ.சி.சி வீட்டுத் தொகுதியில் உள்ள ஆளில்லாத வீடொன்றின் கராஜிலேயே ரேஜில் இந்த ஜீப்பை தெல்தெனிய பொலிஸார் கண்டெடுத்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (சில நாட்களுக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட) பிரத்தியேக செயலாளர் சில வாரங்களுக்கு முன்னர் இந்த ஜீப்பை குறித்த இடத்திற்கு கொண்டு வந்ததாக போதகரின் மகன் ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
கண்டி, பிலபால பிரதேசத்தில் பெண் ஒருவரின் ஜீப்பின் இலக்கத் தகட்டைப் பயன்படுத்தி சந்தேகநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஜீப்பை ஓட்டிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போதகர் சுமார் நான்கைந்து கிலோ கிராம் தங்கம் அணிந்து பொது இடங்களில் சுற்றித்திரிவதுடன், கல்தானையில் உள்ள இவரது ஆலயத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய மாகாண முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரிகள் கடந்த காலங்களில் ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் கண்டியப்பட்டுள்ளது.
இந்த போதகருக்கு டிஃபென்டர் ஜீப்கள் உட்பட பல வாகனங்கள் அசெம்பிள் செய்து தயார்படுத்தப்பட்ட வாகன முற்றம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025