2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

திகா எம்.பி தலைமையில் ஹட்டனில் ஆர்ப்பட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்​  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில், ஹட்டன் மல்லியப்பூ சந்தியில், இன்று (6) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பிரதித் தலைவரும் எம்.பியுமான உதயகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சுமார் 100 பேர் பங்கேற்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X