Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 03 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹற்றன் பொது பேருந்துதரிப்பு நிலையத்தில் இலங்கைபோக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நுவரெலியா மாவட்டமோட்டார் வாகனபிரதான பரிசோதகர் சாலியபண்டார மற்றும் ஹட்டன் போக்குவரத்து பிரிவுபொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் திங்கட்கிழமை அன்று ( 02) மாலை ஈடுபட்டனர்.
திடீர் பரிசோதனையின் போது 28 அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனையிட்ட போது 13 இ.போ.ச பேருந்துகளும் 13 தனியார் பேருந்துகள் பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட 26 பேருந்துகள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து மோட்டார் வாகன பரிசோதகரிடம் காட்டியதன் பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபட முடியும். பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட என மோட்டார் வாகனப்பரிசோதகர் சாலிய பண்டார தெரிவித்தார்.
எம்.கிருஸ்ணா
3 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago