Editorial / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}









எஸ்.கணேசன்
சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு, அவசர சிகிச்சை அளிப்பதற்காக, 48 மணி நேரத்துக்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.
தியத்தலாவையிலுள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில், இந்த வைத்தியமுகாம் அமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில், சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.
சீனாவில் கொரோனா வைரஸ் அசூர வேகத்தில் பரவி வருகின்றது. இதனையடுத்து, உலக நாடுகள், சீனாவிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அழைக்கின்றனர். அந்தவகையில், அங்கு பல்கலைகழகங்களில் பயின்ற இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அவ்வாறு அழைத்து வருபவர்களை, உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்தியமுகாமில் தங்க வைத்து, இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரமே, தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில், இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை, 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago