2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

“திரிபோசா” பக்கெட்டுகள் மீட்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு விநியோகிக்கப்படாமல், தோட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 210 திரிபோசா பக்கெற்றுகளை, மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர்கள், சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதுடன், இவற்றை, உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் பணித்துள்ளனர்.
மஸ்கெலியாவுக்கு உட்பட்ட தோட்டமொன்றிலிருந்தே, திரிபோசா பக்கெற்றுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை, எதிர்வரும் 17ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாகவும் எனவே, அதற்குள் இவற்றை பயன்படுத்தி முடிக்குமாறும் மேற்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், 300 கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக, கடந்தவருடம் வழங்கப்பட்ட திரிபோசா பக்கெற்றுகள் காணாமல் போயுள்ளதாக, சுகாதார அதிகாரிகளின் கவனத்துக்கு தோட்ட மக்கள் கொண்டுச்சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .