2025 ஜூலை 26, சனிக்கிழமை

திருட்டுகளுடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 ஜூலை 26 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை, வட்டகொடை ஆகிய பிரதேசங்களில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் ரூவான் டி சில்வா, எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன், யொகஸ்ட்பொட்டிலுள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டில் திருட்டில் ஈடுபட்டபோதே, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விளைஞன் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஏற்கெனவே இருமுறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவரென, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X