R.Maheshwary / 2022 ஜூன் 23 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
20 இலட்ச ரூபாய் பெறுமதியான திருட்டு பொருள்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் இன்று அதிகாலை (23) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதான மனைவியும் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை- பஹலவத்தயில் உள்ள சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து, வீடுகளை உடைத்து திருடப்பட்ட பொருள்களான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த தம்பதியினர் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய இளைஞரை கைதுசெய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
6 minute ago
8 minute ago
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
35 minute ago
40 minute ago