சுஜிதா / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள பெருந்தோட்டமொன்றில், தோட்ட நிர்வாகியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக, பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
குறித்தத் தோட்டத்திலுள்ள கோவிலின் தேர்த்திருவிழாவை, தன்னுடைய அனுமதியன்றி நடத்தக்கூடாது என, கோவில் பரிபாலன சபையிடம் தோட்ட முகாமையாளர் பணித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்தத் தோட்டத்திலுள்ள அம்மன் கோவில், கடந்த 16 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்பட்டு வருகின்றமையால், அம்மன் திருவிழா நடைபெறவில்லை என்றும் எனினும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் திருவிழா நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இந்தத் திருவிழாவை, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு, கோவில் பரிபால சபை தீர்மானித்திருந்தது என்றும் இதற்கான அழைப்பிதலை வழங்குவதற்கு, தோட்ட முகாமையாளரிடம் சென்றபோதே, மேற்கண்டவாறு பணிப்புரை விடுக்கப்பட்டது என்றும் தெரியவருகின்றது.
இந்தத் தேர்த்திருவிழா நடத்துவதன் மூலம், தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலை ஏற்படும் என்றும் இதனால், கம்பனிக்கு நட்டம் ஏற்படும் என்றும் எனவே, தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, இது தொடர்பாக தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தொழிற்சங்கம், தோட்ட நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago