Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மலையகத்திலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் திறன் அபிவிருத்தி தொடர்பான அறிவை வழங்குவதன் மூலம், திறன்மிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என, பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இயக்குநர் எஸ்.கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஹட்டன், நியூவெளி தொழில் பயிற்சி நிலையத்தின் 24ஆவது ஆண்டு விழா, நேற்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அதிகளவான மாணவர்கள், தங்களது பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், தொழிலுக்கு விண்ணப்பத்துவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளத என்றும் கல்வியின் தரம் அதிகமாக இருந்தாலும் துறைசார்ந்த அறிவு குறைவாக காணப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனால், நேர்முகத் தெரிவின் போது, தங்களுக்கான வாய்ப்புகளை இளைஞர்கள், யுவதிகள் இழந்து விடுகின்றனர் என்றும் சுயதொழிலை மேற்கொள்பவர்களுக்கு, உதவிகளை வழங்க, தனியான அமைச்சு உள்ள நிலையில், திறன் அபிவிருத்திக்கான சான்றிதழ் இருந்தால், அதிக வருமானம் பெறக்கூடிய சுயதொழில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
நியுவெளி தொழில் பயிற்சி நிலையம் ஆரம்பித்து 24 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், வருடமொன்றுக்கு 300 பேர் பயிற்சி பெருவதாகவும் எனினும், பல குறைபாடுகளுக்கு மத்தியிலேயே, இந்தத் தொழிற் பயிற்சி நிலையம் இயங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மலையக அரசியல்வாதிகள், சமூக பற்றுள்ளவர்கள், இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
13 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago