Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
டயகம கிழக்கு 15ஆம் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைப் புனரமைப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.
தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் இருந்த 6 வீடுகள் சேதமடைந்ததுடன் அந்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைப் பார்வையிடுவதற்காக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், மேற்படித் தோட்டத்துக்கு, நேற்று (23) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போதே அவர், வீடுகளை நிர்மாணிப்பதற்கான உறுதிமொழியை வழங்கினார்.
அவருடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்செல்வன், தோட்ட அதிகாரி, பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் சென்றிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஊடாக உலர் உணவுப்பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .