2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தீ விபத்து: 24 வீடுகள் தீக்கிரை

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,   ஆ.ரமேஸ், எஸ்.சதீஸ்

அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், இன்று காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

அத்துடன், குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 35 பேரும், சிறுவர்கள் 45 பேரும் அடங்குகின்றனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதையடுத்து, அட்டன் பொலிஸார், அட்டன் - டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய, சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது,  சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதில் பாதிக்கப்பட்டோர், தற்காலிகமாக போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம், நோர்வூட் பிரதேச சபையினர“, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அட்டன் பொலிஸார்,  அட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .