R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை- மஹாவெல, தலுபொத்துவ பிரதேசத்தில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தலுபொத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த முத்துசாமி நாகலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவியுடன் வீட்டிலிருந்த போது, அவரது வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உயிரிழந்த நபரின் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளாரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளாரென்றும் இவரது மரணத்துக்கு காரணம், குடும்பத் தகராறா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago